Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் உள்ளூர்த் இருபதுக்கு-20 தொடரான நட்வெஸ்ட் இ-20 பிளாஸ்ட் தொடரின் சம்பியன்களாக, நோர்த்தம்டன்ஷையர் தெரிவாகியுள்ளது.
இறுதிகளின் நாள் என அழைக்கப்படும் சனிக்கிழமை இடம்பெற்ற இரண்டு அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து நேரப்படி அன்றிரவே, இறுதிப் போட்டி இடம்பெற்றது. இதில், நோர்த்தம்டன்ஷையர் அணியும் டரம் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டரம் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கேட்டன் ஜெனிங்ஸ், 58 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும், 20 ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை. பந்துவீச்சில் பென் சான்டர்ஸன் 3, றோறி கிளெய்ன்வெல்ட்ற் 2 விக்கெட்டுகுளைக் கைப்பற்றினர்.
154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டன்ஷையர் அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜோஷ் கொப் 80 (48), அலெக்ஸ் வேக்லி 43 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் றஷ்வேர்த் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, ஜோஷ் கொப் தெரிவானார்.
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago