2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட்

Shanmugan Murugavel   / 2016 மே 04 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின், ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சின் மைதானத்தில் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், பெயார்ண் முனிச் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் பெயார்ண் முனிச் அணி வெற்றி பெற்று 2-2 என்ற ரீதியில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியபோதும் பெயார்ண் முனிச் மைதானத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் அணி பெற்ற கோலின் காரணமாக அவ்வணி இறுதிப் போட்டிக்குள் நுழையவுள்ளது.

இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஸ்கெபி அலோன்ஸோ பெற்ற கோலின் மூலம் அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பின்தங்கியிருந்த கோல் எண்ணிக்கையை பெயார்ண் முனிச் சமப்படுத்தியது. பின்னர், பெயார்ண் முனிச்சுக்கு கிடைத்த பெனால்டியை, அவ்வணியின் தோமஸ் முல்லர் தவறவிட்டிருந்த நிலையில், போட்டியின் 53ஆவது நிமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் ஒட்டுவன் கிறீஸ்மன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி கோல் எண்ணிக்கையில்

அதன் பின்னர் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ரொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமமானபோது ஆட்டம் சூடு பறந்த போதும் பின்னர் கிடைத்த பெனால்டி ஒன்றை பெர்னாண்டோ டோரஸ் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில் சத்தம் மிகுந்த இரசிகர்களால் ஆதரவளிக்கப்பட்ட பெயார்ண் முனிச், இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு தேவையான மூன்றாவது கோலுக்காக கடுமையாக முயன்ற பெயார்ண் முனிச், போட்டியின் இறுதிக்கணங்களில் டேவிட் அலபாவினால் அடிக்கப்பட்ட பந்து, அத்லெட்டிகோ கோல்காப்பாளர் ஜான் ஊப்லக்கினால் தடுக்கப்பட இறுதிப் போட்டிக்குச் செல்லும் இறுதிவாய்ப்பையும் இழந்தது.

இப்போட்டியின் நாயகனாக, இப்போட்டியில் ஒன்பது கோல்பெறும் வாய்ப்புகளை தடுத்திருந்த அத்லெட்டிகோ மட்ரிட் கோல்காப்பாளர் ஜான் ஊப்லக் தெரிவானார்.

மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட், மன்செஸ்டர் சிற்றியை றியல் மட்ரிட் வென்றால், 2014ஆம் இறுதிப்போட்டியில் றியல் மட்ரிட்டிடம் தோல்வியடைந்தமைக்கு எதிர்வரும் 28ஆம் திகதி இத்தாலியின் மிலான் நகரில் பழிதீர்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .