Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற தனது சிறு வயது ஆதர்ஷ நாயகியான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி உலகின் 19ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா சம்பியனானார்.
நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் 20 வயதான நயோமி ஒஸாகாவும் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் இலத்தீவியாவின் அனஸ்டஸிஜாவை உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் 6-2 என்ற செட் கணக்கில் முதலாவது செட்டை நயோமி ஒஸாகா வென்றார். இரண்டாவது செட் 2-1 எனக் காணப்பட்டபோதே சர்ச்சைகள் ஆரம்பித்தன. பார்வையாளர்கள் அரங்கில் இருந்த செரீனாவின் பயிற்சியாளர் பற்றிக் மொருக்கு உத்திகளை சமிக்ஞைகள் மூலம் வெளிப்படுத்தினார் எனத் தெரிவித்து நடுவர் கார்லோஸ் றாமோஸ் செரீனா விதியை மீறியதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து புள்ளியொன்றை இழந்ததைத் தொடர்ந்து டென்னிஸ் மட்டையை உடைத்தார். இதனால் செரீனா மீண்டும் விதியை மீறியதாக றாமோஸ் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோபத்தில் வெடித்திருந்த செரீனா, றாமோஸை நோக்கி “என்னிடமிருந்து புள்ளியொன்றை நீங்கள் களவெடுத்து விட்டீர்கள். நீங்கள் ஒரு கள்ளன்” எனலக் கூறியதைத் தொடர்ந்து மூன்றாவது விதி மீறலையடுத்து நயோமி ஒஸாகாவுக்கு புள்ளியொன்றை றாமோஸ் வழங்கினார்.
இதையடுத்து தொடர்ந்த இரண்டாவது செட்டை 6-4 என்ற செட் கணக்கில் வென்ற நயோமி ஒஸாகா சம்பியனாகி, கிரான்ஸ் ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது ஜப்பானியராக தனது பெயரைப் பதிந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago