Shanmugan Murugavel / 2022 நவம்பர் 23 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று மாலை நடைபெற்ற தரவரிசையில் 51ஆம் இடத்திலுள்ள சவுதி அரேபியாவுடனான குழு சி போட்டியில் தரவரிசையில் மூன்றாமிடத்திலுள்ள ஆர்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றதோடு, சவுதி சார்பாக சாலே அல்ஷெஹ்ரி, சலீம் அல்டவஸிறி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சவுதியில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, டென்மார்க், துனீஷியாவுக்கிடையிலான குழு டி போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற போலந்து, மெக்ஸிக்கோவுக்கிடையிலான குழு சி போட்டியும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான குழு டி போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ் வென்றிருந்தது. பிரான்ஸ் சார்பாக, ஒலிவியர் ஜிரூட் இரண்டு கோல்களையும், அட்ரியன் றபியொட், கிலியான் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறேய்க் குட்வின் பெற்றிருந்தார்.
13 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
31 minute ago