Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து ட்ரென்ட்பிரிட்ஜ்ஜில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்றததைத் தொடர்ந்தே இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்களைக் குவித்தது. ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவேயாகும். இதற்கு முன்னர், பாகிஸ்தானுக்கெதிராக கடந்த 2016ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இங்கிலாந்து பெற்ற 444 ஓட்டங்களே ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகக் காணப்பட்டிருந்தது. துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து அணி சார்பாக, அலெக்ஸ் ஹேல்ஸ் 147 (92), ஜொனி பெயார்ஸ்டோ 139 (92), ஜேஸன் றோய் 82 (61), ஒய்ன் மோர்கன் 67 (30) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 482 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 37 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களையே பெற்று 242 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அவுஸ்திரேலிய அணி சார்பாக, ட்ரெவிஸ் ஹெட் 51 (39), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 44 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் 4, மொயின் அலி 3, டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
13 Jul 2025
13 Jul 2025