2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூரை வீழ்த்தி சம்பியனானது இலங்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் இடம்பெற்றுவந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சம்பியனாது. ஒ.சி.பி.சி அரங்கத்தில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது.

இத்தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோற்றிருக்காத இலங்கை, முந்தைய சுற்றில் சிங்கப்பூரை வீழ்த்தியிருந்த நிலையில் இலங்கையே சம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் தொடரினுள் உயர்ந்த தரவரிசை அணியாக நுழைந்த சிங்கப்பூர், நடப்புச் சம்பியனை மூன்று நாட்களுக்குள் இரண்டு தடவை வென்ற நிலையில் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க சவாலை வழங்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், 2.08 மீற்றர் உயரமான புள்ளிகள் பெறுபவரான தர்ஜினி சிவலிங்கமும் 1.8 மீற்றர் உயரத்தை விட அதிகமான மூன்று வீராங்கனைகள் விளையாடியது இலங்கைக்கு சாதகத்தை வழங்கியது.

முதலாவது காற்பகுதியில், சிங்கப்பூருக்கு சர்மைனே சோஹ்ஹும் இலங்கைக்கு தர்ஜினி சிவலிங்கமும் புள்ளிகளைப் பெற முதற்காற் பகுதி முடிவில் இரண்டு அணிகளும் 16-16 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் காணப்பட்டன,

எனினும், இரண்டாவது காற்பகுதியின் ஆரம்பத்தில் சிங்கப்பூர் முன்னிலை பெற்றபோதும் பின்னர் புள்ளிகளைப் பெற்ற இலங்கை முதற்பாதி முடிவில் 32-26 புள்ளிகள் என முன்னிலையைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், தர்ஜினி சிவலிங்கத்திடம் பந்தை வழங்கும் உத்தியை இலங்கை கையாண்டிருந்த நிலையில் அவரின் உயரத்துக்கும் துல்லியத்துக்கும் சிங்கப்பூரால் பதிலளிக்க முடியாத நிலையில், மூன்றாவது காற்பகுதி முடிவில் 50-38 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றது.

இறுதியில், தர்ஜினி சிவலிங்கத்தின் உயரத்தோடு மட்டுமல்லாமல் 1.83 உயரமான ஜெயசூரிய, 1.86 மீற்றர் உயரமான கயானி திஸாநாயக்க ஆகியோரிடமும் புள்ளிகள் தடுப்பாளர், காப்பாளராக சிங்கப்பூர் தடுமாற இறுதியில் 69-50 புள்ளிகள் கணக்கி வென்ற இலங்கை, ஐந்தாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனானது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .