Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியிலேயே நடைபெறவுள்ளது.
சிட்னியில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பதுடன், சிட்னியுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துடன் வேறு மாநிலங்கள் கடுமையான நிலையைப் பேணுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது டெஸ்ட் இடம்பெறும் பிறிஸ்பேர்ண் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலமானது கடுமையான கட்டுப்பாடுகளை பேணுவதும் குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் போட்டி நடைபெற்றாலும் இரசிகர்களின் பங்கேற்கு குறித்து சந்தேகம் நிலவுகின்றது. அரங்கத்தின் கொள்ளவின் அரைவாசிப் பேரே அனுமதிக்கப்படுவதோடு, நடமாடுகையில் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டிக் காணப்படுகின்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளபோதும், எதிர்வரும் திங்கள்கிழமையே இரண்டு அணி வீரர்களும் சிட்னிக்கு பயணமாகவுள்ளனர்.
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago