2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறந்த வீரர் குறும் பட்டியலில் நிக்கெரெக், பரா

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் இவ்வாண்டுக்கான சிறந்த தடகள வீரருக்கான குறும்பட்டியலில், தென்னாபிரிக்காவின் ஓட்ட வீரர் வெய்ட் வான் நிக்கரெக், ஐக்கிய இராச்சியத்தின் நெடுந்தூர ஓட்ட வீரர் மோ பரா, கட்டாரின் உயரம் பாய்தல் வீரர் முடாஸ் எஸ்ஸா பர்ஷிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில், இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் தடகள உலக சம்பியன்ஷிப்பில், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த வான் நிக்கரெக், 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

குறித்த தடகள சம்பியன்ஷிப்பில், 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மோ பரா, 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்த தடகள சம்பியன்ஷிப்பில், முடாஸ் எஸ்ஸா பர்ஷிம் உயரம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனைக்காக குறும் பட்டியலில், கிரேக்க கோலூன்றிப் பாய்தல் வீராகங்கனையான கடெரினி ஸ்டெபனிடி, பெல்ஜியத்தின் தட மற்றும் கள விளையாட்டுகள் ஏழை உள்ளடக்கிய விளையாட்டு வீராங்கனையான நபிஸாடெள தியம், எதியோப்பியாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனையான அல்மஸ் அயனா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இவ்வாண்டு தடக சம்பியன்ஷிப்பில் கடெரினி ஸ்டெபனிடி தங்கம் வென்றிருந்ததுடன், தட மற்றும் கள விளையாட்டுகள் ஏழை உள்ளடக்கிய விளையாட்டில் நபிஸாடெள தியம் தங்கம் வென்றிருந்ததுடன், 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றிருந்த அல்மஸ் அயனா, 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

விருது பெறுபவர்கள், இம்மாதம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள விழாவில் அறிவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .