2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சூட்டில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனையானார் ரஹி சர்னோபட்

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சூட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனையாக தனது பெயரை ரஹி சர்னோபட் இன்று பதிந்து கொண்டார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 25 மீற்றர் எயார் பிஸ்டல் நிகழ்வில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சூட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனையாக தனது பெயரை ரஹி சர்னோபட் பதிந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில், தலா ஐந்து சூட்டுக்களைக் கொண்ட 10 தொடரைத் தொடர்ந்து ரஹி சர்னோபட்டும் தாய்லாந்தின் நபஸ்வன் யங்பைபூனூம் தலா 34 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். இதனையடுத்து இடம்பெற்ற இருவருக்குமிடையேயான போட்டியில் இருவரும் நான்கு தடவைகள் இலக்கௌ நோக்கி சுட்டிருந்தனர். பின்னர் மீண்டும் இருவருக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ரஹி சர்னோப் மூன்று இலக்குகளை சுட்டதோடு, நபஸ்வன் யங்பைபூன் இரண்டு இலக்குகளை சுட, ரஹி சர்னோப் தங்கப் பதக்கத்தை வெல்ல நபஸ்வன் யங்பைபூன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். 29 புள்ளிகளைப் பெற்ற தென்கொரியாவின் கிம் மின்ஜுங் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான 68 கிலோமிராம் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் டிவ்ரா கக்ரன் நேற்று  வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்ததுடன், ஆண்களுக்கான அணி செபக் டக்ரோவிலும் இந்தியா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .