Editorial / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக பதினொருவர் அணி பங்குகொள்ளும் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தொடரில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு, ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அளவு பாதுகாப்பு வழங்கப்படுமென, பஞ்சாப் மாநில அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்தே, இத்தொடர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கிரிக்கெட் குழாமொன்று, பயிற்றுநர் அன்டி ஃபிளவரின் பயிற்றுவிப்பின் கீழ் செயற்படவுள்ளது. இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழாம், துபாயில் 7 நாட்களுக்குப் பயிற்சியில் ஈடுபடும்.
அதன் பின்னர், செப்டெம்பர் 10ஆம் திகதி முதல், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஆரம்பிக்கும்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago