2025 ஜூலை 21, திங்கட்கிழமை

செல்சியை வென்றது றோமா

Editorial   / 2017 நவம்பர் 02 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், றோமா, பரிஸ் ஸா ஜெர்மைன், மன்செஸ்டர் யுனைட்டெட், பெயார்ண் மியூனிச் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

இத்தாலியக் கழகமான றோமா, 3-0 என்ற கோல் கணக்கில், நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சியை வென்றது. றோமா சார்பாக, ஸ்டெபோன் அல் ஷராவி இரண்டு கோல்களையும் டியகோ பெறோட்டி ஒரு கோலையும் பெற்றனர்.

பிரெஞ்சுக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், 5-0 என்ற கோல் கணக்கில், பெல்ஜியக் கழகமான ஆர்.எஸ்.சி அன்டர்லெச்டை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக லவ்வே குஸாவா மூன்று கோல்களையும் மார்கோ வெராட்டி, நேமர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், 2-0 என்ற கோல் கணக்கில், போர்த்துக்கல் கழகமான பெய்பிகாவை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக பெறப்பட்ட ஒரு கோலை டேலி பிளின்ஞ் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

ஜேர்மனியக் கழகமான பெயார்ண் மியூனிச், 2-1 என்ற கோல் கணக்கில், ஸ்கொட்லாந்துக் கழகமான செல்டிக்கை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கிங்ஸ்லி கோமன், ஸ்கெவி மார்ட்டின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்டிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் மக்கிறேகர் பெற்றிருந்தார்.

ஸ்பானியக் கழகமான பார்சிலோனா, கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இத்தாலியக் கழகமான ஜுவென்டஸ், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொன்ஸலோ ஹியூகைன் பெற்றிருந்ததோடு, ஸ்போர்ட்டிங் லிஸ்பன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ப்ரூனோஸ் சீஸர் பெற்றிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .