Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற செவில்லாவுடனான போட்டியில் அவ்வணியை நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோற்கடித்தது.
இப்போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தமது முன்களவீரர் லூயிஸ் சுவாரஸ் தலைக்கு மேலால் பெற்ற கோலுடன் முன்னிலை பெற்ற பார்சிலோனா, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் ஆர்தர் மெலோவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது இன்னொரு மத்தியகளவீரர் ஆர்துரோ விடாலின் தொடுகையுடன் கோலான நிலையில் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.
இந்நிலையில், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் சிறப்பான தனித்த கோலை பார்சிலோனாவின் முன்களவீரரான உஸ்மான் டெம்பிலி பெற்றநிலையில் முதற்பாதி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா முன்னிலை வகித்தது.
பின்னர் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் பிறீ கிக் மூலம் தமது அணித்தலைவரும் முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி கோலொன்றைப் பெற்ற நிலையில் இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது.
இதேவேளை, றியல் வல்லடொலிட்டின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்திருந்தது.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,
நிலை அணி போட்டிகள் கோல் வித்தியாசம் புள்ளிகள்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago