2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சுதா சிங்குக்கு சீகா இல்லை; பன்றிக் காய்ச்சலே

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனையான சுதா சிங்குக்கு, ஏற்கெனவே அஞ்சப்பட்டது போன்று சீகா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் அவருக்குப் பன்றிக் காய்ச்சலே ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இம்முறை இடம்பெற்ற இடர்கடக்கும் 3,000 மீற்றர் ஓட்ட்தில் பங்குகொண்ட சுதா சிங், சீகா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகிகப்பட்டு, பெங்க;ரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சீகா வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படும் பிரேஸிலில் இடம்பெற்ற இப்போட்டிகளில் பங்குபற்றி, அதன் மூலமாக சீகா வைரஸ் தொற்றைப் பெற்ற முதலாமவராக அவர் கருதப்பட்டார்.

இந்நிலையிலேயே, அவருக்குப் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர்கள், இரண்டு அல்லது மூன்று வாரங்களில், வைத்தியசாலையிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .