Editorial / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டியொன்றில், கடந்த பருவகால சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் விளையாடிய இத்தாலியக் கழகமான ஜுவென்டஸை, ஸ்பானியக் கழகமான பார்சிலோனா வென்றது.
தமது மைதானத்தில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், ஜுவென்டஸை பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் இவான் றகிட்டிச் ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, இன்னொரு ஸ்பானியக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கும் இன்னொரு இத்தாலியக் கழகமான றோமாவுக்கு இடையிலான இன்னொரு குழுநிலைப் போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், பிரெஞ்சுக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், 5-0 என்ற கோல் கணக்கில், ஸ்கொட்லாந்துக் கழகமான செல்டிக்கை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் நேமர், கிலியன் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, இடம்பெற்ற பிறிதொரு குழு நிலைப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், 3-0 என்ற கோல் கணக்கில், சுவிஸ் கழகமான பாஸிலை வென்றது. யுனைட்டெட் சார்பாக, மெளறொம் பெலினி, றொமேலு லுக்காக்கு, மார்க்கஸ் றஷ்போர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், ஜேர்மனியக் கழகமான பெயார்ண் மியூனிச், 3-0 என்ற கோல் கணக்கில், பெல்ஜியக் கழகமான ஆர்.எஸ்.சி அன்டெர்லெச்டை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, தியாகோ அல்கான்டரா, ஜோஷுவா கிம்மிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, அஸர்பைஜான் கழகமான எப்.கே குராபாக்கை, 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. செல்சி சார்பாக, பெட்ரோ, ஸப்பகொஸ்டா, சீஸர் அப்பிலிகுவாட்டா டிமுயி பகயுக்கு, மிச்சி பச்சுவாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் கோல் கிடைக்கப் பெற்றிருந்தது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago