Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியில், பென் டக்கெட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜொஸ் பட்லர் சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது. அதில் குறிப்பாக பென் டக்கெட், 3 இனிங்ஸ்களில் 18 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளதோடு, சுழற்பந்து வீச்சுக்குத் தடுமாறியிருந்தார்.
இந்நிலையிலேயே, ஜொஸ் பட்லரை அணிக்குக் கொண்டு வருவது குறித்து, ஓரளவு உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக யாரை நீக்குவது என்பதில், பென் டக்கெட்டே அதிக வாய்ப்புள்ளவராகக் கருதப்படுகிறார்.
இதற்கு முன்னர் விக்கெட் காப்பாளராக விளையாடியிருந்த ஜொஸ் பட்லர், கடந்தாண்டு ஒக்டோபரில், அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 30 என்ற சராசரியையே கொண்டுள்ளார். அத்தோடு முதற்தரப் போட்டிகளிலும் 32.07 என்ற சராசரியையே கொண்டுள்ளார்.
எனினும், அவரது திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்றுநர் ட்ரவெர் பெய்லிஸ், அவரை இப்போட்டியில் விளையாட வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
3 minute ago
12 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
38 minute ago
53 minute ago