2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தேசிய கால்பந்து அணிக்கு திருமலை குவேதா தெரிவு

Editorial   / 2025 ஜூலை 11 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

இலங்கையின் 20வயது பெண்கள் தேசிய கால்பந்து  அணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவி தயாபரன் குவேதா தெரிவானார்.

பங்களாதேஷில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (11)  ஆரம்பமாகின்றது.

இப்போட்டிக்கான இலங்கை தேசிய அணியில் திருகோணமலை மாணவியான தயாபரன் குவேதாவும் இணைக்கப்பட்டுள்ளார். இவர்   பங்களாதேஷ் பயணம் செய்த இலங்கை குழாமுடன் இணைந்துள்ளார்.

பின்வரும் கால ஒழுங்கில் பின்வரும் நாடுகளுடன் போட்டிகளில் இலங்கை அணி பங்கெடுக்க உள்ளது.

ஜூலை 11  பங்களாதேஷ் அணியுடனும்,

ஜூலை 13  பூட்டான் அணியுடனும்,

ஜூலை 15  நேபாள அணியுடனும்,

ஜூலை 17  நேபாள அணியுடனும்,

ஜூலை 19  பங்களாதேஷ் அணியுடனும்

ஜூலை 21  பூட்டான் அணியுடனும் போட்டிகள் நடைபெறும்.

“இந்த பயணத்தில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி இலங்கை அணிக்காக வெற்றியை பெற்றுத் தருவதோடு  திருகோணமலை மண்ணுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன்” என்று குவேதா கூறியுள்ளார்/


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .