2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாக 2ஆவது டெஸ்ட் ஆடுகளம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டுக்கான ஆடுகளத்தில் ஆங்காங்கே புல்லுகளும், வெறுமையான பகுதிகளும் காணப்படுகின்றது.

முதலாவது போட்டிக்கான ஆடுகளமானது அனைத்து இடங்களிலும் சம அளவிலாக புல்லுகளைக் கொண்டிருந்தது.

இரண்டாவது போட்டி நடைபெறும் டெல்லி மைதானத்தில் ஆடுகளமானது கறுப்பு மண் அடித்தளத்தைக் கொண்டிருப்பதுடன், துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதகத்தை வழங்குவதுடன், ஆடுகளம் படுப்படியாக காய சுழற்பந்துவீச்சுக்கு சாதகத்தை வழங்குமெனத் தெரிகிறது.

முதலாவது போட்டியானது மூன்று நாள்களுக்குள் முடிவடைந்திருந்தது.

டெல்லி மைதானம் விரைவானதாகவும், முதலாவது போட்டி இடம்பெற்ற அஹமதாபாத்தை விட சிறியதாகவும் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X