2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய வலைப்பந்தாட்ட அணியில் எழிலேந்தினி, தர்ஜினி

Editorial   / 2019 மே 23 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

இங்கிலாந்தில் இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கான இலங்கையணியில், வட மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான தர்ஜினி சிவலிங்கம், எழிலேந்தினி சேதுகாவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லிவர்பூலில் இவ்வாண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையிலும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 12 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகில் சிறந்த பந்து எய்பவர் என வர்ணிக்கப்படும், ஆசியக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த தர்ஜினி சிவலிங்கம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக பல போட்டிகளில் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பிரகாசித்து வரும் எழிலேந்தினி சேதுகாவலரும் முதன்முறையாக உலகக் கிண்ண அணியின் உள்வாங்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணியானது, முதற்சுற்றில் அவுஸ்திரேலியா, வட அயர்லாந்து, சிம்பாப்பே அணிகளுடன் மோதவுள்ளது.

இலங்கையணி: சதுரங்கனி ஜயசூரிய (அணித்தலைவி), கஜனி திஸாநாயக்க (உபதலைவி), ஹசிதா மென்டிஸ், தர்ஜினி சிவலிங்கம், எழிலேந்தினி சேதுகாவலர், கஜங்ஞலி அமரவங்ச, துலங்கா தனஞ்சலி, நவுஜல ராஜபக்ஸ, துலங்கி வன்னிதிலக்க, தர்ஸிகா அபேவிக்ரம, திலினி வத்தேஹெதர, தீபிகா ப்ரியதர்ஸினி அபயகோன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X