Shanmugan Murugavel / 2024 நவம்பர் 07 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில் பார்படோஸில் புதன்கிழமை (06) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலமே 2-1 என்ற ரீதியில் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பில் ஸோல்டின் 74 (108), டான் மெளஸ்லியின் 57 (70), சாம் கர்ரனின் 40 (52), ஜொஃப்ரா ஆர்ச்சரின் ஆட்டமிழக்காத 38 (17), ஜேமி ஒவெர்ட்டனின் 32 (21) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மத்தியூ போர்ட் 3, அல்ஸாரி ஜோசப் மற்றும் றொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2, றொஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 264 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், கேசி கார்ட்டியின் ஆட்டமிழக்காத 128 (114), பிரண்டன் கிங்கின் 102 (117) ஓட்டங்களோடு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜேமி ஒவெர்ட்டன், றீஸ் டொப்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக கிங்கும், தொடரின் நாயகனாக போர்ட்டும் தெரிவாகினர்.
11 minute ago
22 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
36 minute ago
52 minute ago