Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒரு போட்டி மீதமிருக்கையில், மூன்றாவது போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. இரவிச்சந்திரன் அஷ்வின் 118, ரித்திமான் சகா 104 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோஸப், மிக்கல் கம்மின்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திருந்தனர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. கிரேய்க் பிராத்வெயிட் 64, மார்லன் சாமுவேல்ஸ் 48 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை நிறுத்தியது. அஜின்கியா ரகானே 78 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் மிக்கல் கம்மின்ஸ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில், 346 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 237 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. டரன் பிராவோ 59 ஓட்டங்களைப் பெற்றதோடு, மொஹமட் ஷமி மூன்று, இஷாந் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார்.
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago