2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது. 

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாததோடு, இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றிருந்ததோடு, நேற்று நேப்பியரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியானது மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி சமநிலையான நிலையிலேயே 1-0 என தொடரை இந்தியா கைப்பற்றியது. 

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 160/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே 59 (49), கிளென் பிலிப்ஸ் 54 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/17 [4], அர்ஷ்டீப் சிங்க் 4/37 [4], ஹர்ஷால் பட்டேல் 1/28 [3.4], தீபக் ஹூடா 0/3 [1])

இந்தியா: 75/4 (9 ஓவ.  ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா ஆ.இ 30 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/27 [3], இஷ் சோதி 1/12 [2], மிற்செல் சான்ட்னெர் 0/5 [1], லொக்கி பெர்கியூசன் 0/8 [1])

போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்

தொடரின் நாயகன்: சூரியகுமார் யாதவ் 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X