Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 31 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது உலகப் பட்டத்தை, மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸில் வென்றுள்ளார்.
தனது வைரியான, பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலுடனான மோதலொன்றைத் தொடர்ந்து, குறித்த பந்தயத்தில் ஒன்பதாமிடத்தையே ஹமில்டன் பெற்றபோதும் அவர் தனது பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு அது போதுமானதாக் இருந்துள்ளது.
அந்தவகையில், ஏழு பட்டங்களைக் கைப்பற்றிய ஜேர்மனிய ஓட்டுநரான மைக்கல் ஷூமாருக்கு அடுத்ததாக, லூயிஸ் ஹமில்டன், செபஸ்டியன் வெட்டல், பிரெஞ்சின் அலைன் புறொஸ்ட் ஆகியோர் தலா நான்கு பட்டங்களுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றனர்.
குறித்த பந்தயத்தின் முதலாவது சுற்றில், வெட்டலால் மோதப்பட்டத்தையடுத்து, ஹமில்டனின் காரின் பின்புற டயர் ஓட்டையாகியிருந்ததுடன் வெட்டலின் முன்பகுதியும் சேதமடைந்திருந்தது. இதன்பிறகு முன்னேறிய வெட்டல் நான்காமிடத்தைப் பெற்றிருந்தபோதும், இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான உலகப் பட்டத்தை, அடுத்த பந்தயத்துக்கு கொண்டு செல்வதற்கு இரண்டாமிடத்தை பெறவேண்டியிருந்தது.
இப்பந்தயத்தின் முதலாவது வளைவிலிருந்து முன்னணி பெற்ற றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், தொடர்ந்தும் பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றிருந்தார். வெர்ஸ்டப்பன் முதலாவது வளைவில் முன்னணி பெற்றதைத் தொடர்ந்தே, ஹமில்டனும் வெட்டலும் மோதியிருந்தனர்.
பந்தயத்தில் இரண்டாமிடத்தை, மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸூம் மூன்றாமிடத்தை, பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனும் பெற்றிருந்தனர்.
2 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
21 Jul 2025