Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேசில் வீரர் நெய்மரின் நடிப்பு, கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல எனவும் அவரின் அதீத நடிப்பால், தமது அணி தோற்றுப்போனதாகவும், மெக்சிகோ பயிற்சியாளர் ஜுஹான் கார்லோஸ் ஒசோரியோ வெளியிட்ட கருத்துக்கு, நெய்மர் பதிலளித்துள்ளார்.
“நெய்மரின் செயல் கால்பந்துக்கே அவமானமாக அமைந்துள்ளது. ஒரேயொரு வீரரால், நிறைய நேரம் வீன்விரயம் செய்யப்படுகிறது. கால்பந்து அரங்கில், நெய்மர் ஓர் எதிர்மறை உதாரணமாக விளங்குகிறார். அவரைப் பின்தொடரும் சிறுவர்களுக்கும் இது கேடாகும்” என, ஜுஹான் கார்லோஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற இறுதி 16 அணிகள் பங்கேற்ற “நொக் அவுட்” சுற்று ஆட்டத்தில், பிரேசிலிடம் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ தோல்வியடைந்து, உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. போட்டியின் நிறைவில், ஜுஹான் கார்லோஸ் இந்தக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் பதிலளித்துள்ள நெய்மர், “இவை, என்னைக் கவிழ்ப்பதற்காகக் கூறப்படுவதே அன்றி வேறொன்றுமில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனல்ல. பாராட்டுகளையும் கூட நான் கண்டுகொள்ளமாட்டேன். ஏனெனில், இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago