Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நாப்போலியுடனான போட்டியில் ஜுவென்டஸ் வென்றது.
இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பெற்ற கோலின் மூலம் நாப்போலி முன்னிலை பெற்றது. எனினும் சக வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை 26ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய ஜுவென்டஸின் மரியோ மண்டூஸிக் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில், 49ஆவது நிமிடத்தில் கோலாக்கிய மரியோ மண்டூஸிக் ஜுவென்டஸுக்கு முன்னிலையை வழங்கினார். தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை லியனார்டோ பொனுச்சி கோலாக்க இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் ஜுவென்டஸ் வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லேஸியோ அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது. றோமா சார்பாக, லொரென்ஸோ பெல்லெகிரினி, அலெக்ஸான்டர் கொலரோவ், பெடெரிக்கோ பஸியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைல் பெற்றார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற கல்லேகிரி அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாக, லோடரோ மார்ட்டின்ஸ், மட்டியோ பொலிட்டானோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago