Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, ஐந்து போட்டிகள் கொண்ட, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், தரம்சாலாவில், இன்று ஆரம்பித்த நிலையில், முதலாவது போட்டியில், இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோணி, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டொம் லதாம் ஆட்டமிழக்காமல் 79(98), டிம் சௌதி 55(45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹர்டிக் பாண்ட்யா, அமித் மிஷ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், கேதார் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 33.1 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 85(81), அஜிங்கியா ரகானே 33(34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டவ் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, ஹர்டிக் பாண்ட்யா தெரிவானார்.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago