2026 மே 21, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2026 மே 20 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், சியல்ஹெட்டில் சனிக்கிழமை (16) ஆரம்பித்து புதன்கிழமை (20) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பங்களாதேஷ்: 278/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 126 ஓட்டங்கள். பந்துவீச்சு: குராம் ஷெஷாட் 4/81, மொஹமட் அப்பாஸ் 3/45, ஹஸன் அலி 2/49, சஜிட் கான் 1/96)

பாகிஸ்தான்: 232/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 68, சஜிட் கான் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிட் ரானா 3/60, தஜியுல் இஸ்லாம் 3/67, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/21, தஸ்கின் அஹ்மட் 2/37)

பங்களாதேஷ்: 390/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 137, லிட்டன் தாஸ் 69, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: குராம் ஷெஷாட் 4/86, சஜிட் கான் 3/126, ஹஸன் அலி 2/83, மொஹமட் அப்பாஸ் 1/66)

பாகிஸ்தான்: 358/10 (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 94, சல்மான் அக்ஹா 71, ஷண் மசூட் 71, பாபர் அஸாம் 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 6/120, நஹிட் ரானா 2/71, ஷொரிபுஃல் இஸ்லாம் 1/29, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/62)

போட்டியின் நாயகன்: லிட்டன் தாஸ்

தொடரின் நாயகன்: முஷ்பிக்கூர் ரஹீம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X