2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பட்லரால் 5-0 என அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்தது இங்கிலாந்து

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 5-0 என அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் வென்றிருந்த இங்கிலாந்து ஓல்ட் ட்ரபோர்ட்டில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில், ஒன்பது பந்துகள் மீதமிருக்கையில் ஜொஸ் பட்லரின் அபாரமான சதத்துடன் ஒரு விக்கெட்டால் வென்றமையைத் தொடர்ந்தே, முதற்தடவையாக அவுஸ்திரேலியாவை 5-0 என வெள்ளையடித்துக் கொண்டது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 34.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ட்ரெவிஸ் ஹெட் 56 (42), டார்சி ஷோர்ட் ஆட்டமிழக்காமல் 47 (52), அலெக்ஸ் காரே 44 (40) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி 4, சாம் குரான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து,  48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 110 (122) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பில்லி ஸ்டான்லேக், கேன் றிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 3, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் ஜொஸ் பட்லர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .