2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவில் தனித்து பயிற்சியில் ஈடுபடும் டியர் ஸ்டீகன்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 16 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகனின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் தனியே பயிற்சியில் ஈடுபடுகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த 33 வயதான டியர் ஸ்டீகன், 2016ஆம் ஆண்டுலிருந்து முதன்மை கோல் காப்பாளராக இருந்தார். எனினும் இப்பருவகாலத்தில் முன்னுரிமையில் பின்னணியில் காணப்படுகின்றார்.

கழகத்தை விட்டு வெளியேறுமாறு டியர் ஸ்டீகனை பார்சிலோனா கூறியதாகவும் ஆனால் கழகத்தில் இருக்கும் விருப்பத்தையே இதுவரையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்தாண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரில் ஜேர்மனியின் முதன்மை கோல் காப்பாளராக இருக்க விரும்பும் டியர் ஸ்டீகனுக்கு தொடர்ச்சியான போட்டிகள் தேவைப்படுமென்ற நிலையில், பார்சிலோனாவில் அவர் விளையாட மாட்டார் எனத் தெளிவாகும்போது தனது நிலையை அவர் மாற்றுவாரென பார்சிலோனா எதிர்பார்க்கின்றது.

ஜோன் கர்சியாவை பார்சிலோனா கைச்சாத்திட்டுள்ளதுடன், புதிய இரண்டாண்டு ஒப்பந்தத்தை வொஜெக் ஸிஸென்ஸ்கியும் பார்சிலோனாவுடன் கைச்சாத்திட்டிருந்தார். இது தவிர இன்னொரு கோல் காப்பாளரான இனகி பெனாவும் குழாமில் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X