Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்றுவரும் 15ஆவது பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிவரும் இலங்கை, பராலிம்பிக் வரலாற்றில், தனது இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ஈட்டி எறிதலில், டினேஷ் பிரியந்த ஹேரத் பெற்றுக்கொண்ட வெண்கலப் பதக்கமே, இவ்வாறு இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தது.
ஒரு கையில் முழங்கைக்குக் கீழ் அவய இழப்பைச் சந்தித்தவர்களுக்கான (F46) ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்குகொண்ட டினேஷ் பிரியந்த ஹேரத், 58.23 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து, மூன்றாவது இடத்தைப் பெற்றார். முதலாவது இடத்தை இந்தியாவின் தேவேந்திராவும் இரண்டாவது இடத்தை சுன்லியாங் குவோவும் பெற்றுக் கொண்டனர்.
30 வயதான டினேஷ் பிரியந்த, 55.26 மீற்றர்கள் என்ற தனது தனிப்பட்ட அதியுச்ச தூரத்தை எறிந்து, பராலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருந்த நிலையில், தற்போது வெண்கலப் பதக்கத்தை வெல்வதற்கு, மீண்டுமொரு முறை தனது அதியுச்ச தூரத்தை எறிந்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த டினேஷ், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில், தனது இடது கையில் காயத்தைச் சந்தித்தமையைத் தொடர்ந்தே, விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதற்கு முன்னர், கடந்த முறை இடம்பெற்றிருந்த பராலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில், பிரதீப் சஞ்சய, வெண்கலப் பதக்கத்தை வென்றமையே, முதலாவது பதக்கமாக அமைந்தது. ஆனால் இம்முறை, இதுவரை வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக, இம்முறை போட்டிகளுக்காக அவர் அனுப்பப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
45 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago