Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 09 , மு.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்து, தொடர்ச்சியாக இரண்டாவது பருவகாலமாக இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது.
பார்சிலோனாவின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த லிவர்பூல், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே பார்சிலோனாவின் முன்னிலையை இரண்டாகக் குறைத்தது.
பார்சிலோனாவின் பின்களவீரர் ஜோர்டி அல்பா தலையால் முட்டிய பந்து, லிவர்பூலின் அணித்தலைவரும் மத்தியகளவீரருமான ஜோர்டான் ஹென்டர்சனின் கால்களில் வர, அவர் அதனைக் கோல் கம்பத்தை நோக்கி உதைந்திருந்தார். அதை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்திருந்தபோதும், அது நேராக லிவர்பூலின் முன்களவீரரான டிவோக் ஒரிஜியிடம் செல்ல அவர் அதனைக் கோலாக மாற்றினார்.
இதன் பின்னர், போட்டியின் 54ஆவது நிமிடத்தில், சக பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய, மாற்றுவீரராகக் களமிறங்கிய ஜோர்ஜினியோ விஜ்னால்டும், பார்சிலோனாவின் முன்னிலையை ஒன்றாகக் குறைந்ததுடன், அடுத்த இரண்டாவது நிமிடத்தில், சக முன்களவீரர் ஸ்கொட்ரான் ஷகியிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
இந்நிலையில், போட்டி முடிவடைய 11 நிமிடங்களிருக்கையில் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் மூலையுதையை டிவோக் ஒரிஜி கோலாக்கியதோடு, இறுதியில் 4-3 என்ற மொத்த கோலெண்ணிக்கையில் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago