2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாம் சுற்றில் டொமினிக் தியெம்

Editorial   / 2019 மே 28 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டொமி போலை, உலகின் நான்காம் நிலை வீரரான டொமினிக் தியெம் வென்றார்.

6-4. 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் குறித்த போட்டியில் வென்ற டொமினிக் தியெம், இரண்டாவது சுற்றிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் போலந்தின் ஹபேர்ட் ஹர்கஸ்ஸை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் யனிக் ஹன்ஃப்மானை எதிர்கொண்ட உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால்,ம, 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் போலின் பர்மென்டியரை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் விடாலியா டியட்சென்கோவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், கைக் காயமொன்று காரணமாக உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .