Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல்-இதிஹாட்டிலிருந்து மத்தியகளவீரரான என்கலோ கன்டேயைக் கைச்சாத்திட்டதை துருக்கியக் கழகமான பெனர்பாச்சே உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக பெனர்பாச்சேயில் இணையும் கன்டேயின் நம்பிக்கை செவ்வாய்க்கிழமை (03) தகர்ந்திருந்தது. ஏனெனில் கன்டேயைக் கைச்சாத்திடும் நகர்வு தகர்ந்ததுக்கு அல்-இதிஹாட்டைச் சாடும் அறிக்கையொன்றை பெனர்பாச்சே வெளியிட்டிருந்தது.
கன்டேயைக் கைச்சாத்திடுவதற்குத் தேவையான ஆவணங்களை அல்-இதிஹாட் பூர்த்தி செய்யத் தவறியதாக பெனர்பாச்சே தெரிவித்திருந்தது. இந்த நகர்வில் பெனர்பாச்சேயின் முன்களவீரர் யூசுஃப் என்-நெஸிரி அல்-இதிஹாட்டுக்குச் செல்லவிருந்தார்.
இந்நிலையிலேயே பிரச்சினை தீர்க்கப்பட்டதாக புதன்கிழமை (04) பெனர்பாச்சே உறுதிப்படுத்தியிருந்தது.
3 minute ago
26 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
26 minute ago
29 minute ago
45 minute ago