Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸில், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது போட்டியாளரான மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனைத் தாண்டி வென்ற பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ஹமில்டனின் முன்னிலையை 17 புள்ளிகளாகக் குறைத்துக் கொண்டார்.
நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை ஹமில்டனே முதல்நிலையிலிருந்து ஆரம்பித்திருந்தபோதும் இரண்டாவதாக பந்தயத்தை ஆரம்பித்திருந்த வெட்டல் முதலாவது சுற்றிலேயே ஹமில்டனை முந்தியதுடன், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றார்.
இப்பந்தயத்தின் முதலாவது வளைவில், றெனோல்ட் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ ஹல்கன்பேர்க், மக்கலரென் அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோவின் காரில் மோதிய நிலையில், செளபர் அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள் லுக்லெயரின் காருக்கு மேலால் அலோன்ஸோவின் கார் சென்றிருந்தது.
எவ்வாறெனினும் அலோன்ஸோ, ஹல்கன்பேர்க், லுக்லெயர் காயமடைந்திருக்கவில்லை. இந்நிலையில், ஹல்கன்பேர்க்குக்கு இவ்வார இத்தாலிய கிரான்ட் பிறிக்ஸ் பந்தயத்தில் 10 நிலை தண்டம் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், போர்மியுலா வண்ணில் புதிய ஹலோ தலைக் காப்பு சாதனம் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் போர்மியுலா வண் ஓட்டுநரொருவர் அதால் காயத்திலிருந்து தப்பிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. ஏனெனில், அலோன்ஸோவின் காரானது லுக்லெயரின் ஹலோவில் பட்டே சென்றிருந்தது.
குறித்த சம்பவத்தை தவிர, றெட்புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ, பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனின் காரில் மோதியிருந்த நிலையில், ஆரம்பத்தில் இருவரும் பந்தயத்தில் மீண்டும் இணைந்தபோதும் பின்னர் பந்தயத்திலிருந்து விலகியிருந்தனர்.
இப்பந்தயத்தில், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago