Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை நகரில் நடைபெற்று வந்த 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான விளையாட்டு விழா நேற்றைய தினம் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது.
71 நாடுகளிலிருந்து, 18 பிரிவுகளில், 278 விளையாட்டுகளில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்றனர்.
பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை ஒரு வெள்ளி 5 வெண்கலம் உள்ளடங்களாக ஆறு பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 31ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. போட்டிகளில் 71 நாடுகளில் 39 நாடுகள் ஒரு பதக்கத்தையேனும் கைப்பற்றின.
போட்டிகள் நிறைவடைந்ததும், நேற்று மாலை போட்டி நிறைவு விழா கராரா மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக விழா நடைபெற்றது.
கேலாகல நிறைவு விழா நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டிருந்தனர். விழாவை சிறப்பாக நடத்திக்கொடுத்மைக்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் நன்றி தெரிவித்தார்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago