2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய ப்றூக்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 09 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்றூக் முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 181 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.

இப்போட்டியில் 430 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் அணித்தலைவர் ஷுப்மன் கில் 21ஆம் இடத்திலிருந்து 15 இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த போட்டியில் 272 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித், 26ஆம் இடத்திலிருந்து 16 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஹரி ப்றூக், 2. ஜோ றூட், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. ஸ்டீவ் ஸ்மித், 6. ஷுப்மன் கில், 7. தெம்பா பவுமா, றிஷப் பண்ட், 9. கமிந்து மென்டிஸ், 10. ஜேமி ஸ்மித்.

இந்நிலையில் சிம்பாப்வேக்கெதிரனா இரண்டாவது டெஸ்டில் 367 ஓட்டங்களைப் பெற்றதுடன், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வியான் முல்டர், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் 15ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. வியான் முல்டர், 4. மார்கோ ஜன்சன், 5. பற் கமின்ஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. பற் கமின்ஸ், 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. நொமன் அலி, 6. மற் ஹென்றி, 7. நேதன் லையன், 8. மார்கோ ஜன்சன், 9. ஜேடன் சியல்ஸ், 10. மிற்செல் ஸ்டார்க்.

இதேவேளை பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 170 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையணியின் தலைவரான சரித் அசலங்க, எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை துடுப்பாட்டவரிசையில் அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தொடரில் 225 ஓட்டங்களைப் பெற்ற குசல் மென்டிஸ், 20ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷுப்மன் கில், 2. பாபர் அஸாம், 3. றோஹித் ஷர்மா, 4. விராட் கோலி, 5. டரைல் மிற்செல், 6. சரித் அசலங்க, 7. ஹரி டெக்டர், 8. ஷ்ரேயாஸ் ஐயர், 9. இப்ராஹிம் ஸட்ரான், 10. குசல் மென்டிஸ்.

இதேவேளை குறித்த தொடரில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, 19ஆம் இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மகேஷ் தீக்‌ஷன, 2. குல்தீப் யாதவ், 3. கேஷவ் மஹராஜ், 4. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 5. ரஷீட் கான், 6. மிற்செல் சான்ட்னெர், 7. மற் ஹென்றி, 8. வனிது ஹசரங்க, 9. இரவீந்திர ஜடேஜா, 10. அடம் ஸாம்பா.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. மிஷெல் பிறேஸ்வெல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .