Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தா, பலெம்பாங்கில் கடந்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்த 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது.
இம்முறை பதக்கப் பட்டியலில், 132 தங்கப் பதக்கங்கள், 92 வெள்ளிப் பதக்கங்கள், 65 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமான 289 பதக்கங்களுடன் மீண்டும் சீனா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 1974ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற சீனா, 1982ஆம் ஆண்டு முதல் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 75 தங்கப் பதக்கங்கள், 56 வெள்ளிப் பதக்கங்கள், 74 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 205 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், 49 தங்கப் பதக்கங்கள், 58 வெள்ளிப் பதக்கங்கள், 70 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 177 பதக்கங்களைப் பெற்ற தென்கொரியா மூன்றாமிடத்தைப் பெற்றது.
இந்தோனேஷியா, 31 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 43 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 98 பதக்கங்களுடன் நான்காமிடத்தைப் பெற்றிருந்ததுடன், 21 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 70 பதக்கங்களுடன் உஸ்பெக்கிஸ்தான் ஐந்தாமிடத்தைப் பிடித்திருந்தது.
அயல் நாடான இந்தியா, வழமை போன்று 10ஆவது இடத்துக்குள், 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 30 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமான 69 பதக்கங்களைப் பெற்று எட்டாமிடத்தைப் பெற்றதுடன் இம்முறை தடகளத்திலும் பதக்கங்களைப் பெற்றிருந்தது.
28 விளையாட்டுக்களைப் பிரதிநித்துவப்படுத்தி 173 வீரர்களுடனும் 78 அதிகாரிகளுடனும் சென்ற இலங்கை எந்தவித பதக்கத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பதக்கத்தைப் பெறாத நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அதிகபட்சமாக, ஆண்களுக்கான றக்பியிலும் ஆண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் நான்காவது இடத்தை இலங்கை பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago