2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை மீண்டும் வென்றது பாகிஸ்தான்

Editorial   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கராச்சியில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 97 (58), ஹுஸைன் தலாட் 63 (41), ஷோய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 17 (07), ஆசிப் அலி 14 (08) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஒடென் ஸ்மித், கெஷ்ரிக் வில்லியம்ஸ், றயாட் எம்ரிட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே பெற்று 82 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சட்விக் வோல்டன் 40 (29), டினேஷ் ராம்டீன் 21 (20), கீமோ போல் 17 (10), அணித்தலைவர் ஜேசன் மொஹமட் 15 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 3, ஷடாப் கான், ஹுஸைன் தலாட் ஆகியோர் தலா 2, மொஹமட் நவாஸ், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக பாபர் அஸாம் தெரிவானார். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 2-0 என அசைக்க முடியாத முன்னிலையை தொடரில் பாகிஸ்தான் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .