Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையிலான குழு எச் போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நெய்மர் இரண்டு கோல்களையும், மார்க்குய்ன்ஹாஸ் ஒரு கோலையும் பெற்றனர். மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவுக்குமிடையிலான குழு எஃப் போட்டியொன்றானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
பொரூசிய டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றஃபேல் குரைரோ பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைலி பெற்றிருந்தார்.
குறித்த போட்டி முடிவையடுத்து விலகல் முறையிலான சுற்றுக்கு பொரூசியா டொட்டமுண்ட் தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட நான்கு கோல்களையும் ஒலிவியர் ஜிரூட் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago