Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளரான டுவன்னே ஒலிவியர், இங்கிலாந்து கவுண்டி அணியான யோக்ஷையருடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளார்.
2017ஆம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட 26 வயதான டுவன்னே ஒலிவர், 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 19.25 என்ற சராசரியில் 48 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதுவும், பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கடந்தாண்டு டிசெம்பரில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடரின் நாயகனாகத் தெரிவானதுடன், இலங்கைக்க்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 19ஆம் இடத்துக்கு உயர்ந்திருக்க டுவன்னே ஒலிவியருக்கு, தற்போது கொல்பக் ஒப்பந்தத்தில் யோக்ஷையருடன் இணைவது மிகக் கடினமாக அமையவுள்ளது.
10 டெஸ்ட்களுக்கு மேலதிகாக இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் கடந்த மாதம் விளையாடியிருந்த டுவன்னே ஒலிவியர், உலகக் கிண்ணத்துக்கான தெரிவிலும் இருந்திருந்தார்.
இந்நிலையில், யோக்ஷையருடனான டுவன்னே ஒலிவியரின் கொல்பக் ஒப்பந்த முடிவுக்கு முன்பாக, தென்னாபிரிக்காவில் தொடர்ந்து விளையாடுவதற்காக இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தை வழங்கியிருந்ததாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், டுவன்னே ஒலிவருடன் சேர்த்து, முதன்முறையாக கொல்பக் ஒப்பந்தத்தில் இணைந்து சுழற்பந்துவீச்சாளர் குளோட் ஹென்டர்சனிலிருந்து கைல் அபொட், றீலீ றொஸோ, ஸ்டியான் வான் ஸில், சைமன் ஹார்மர், டேவிட் விஸே, டேனி விலாஸ் உள்ளடங்கலாக 42 தென்னாபிரிக்க வீரர்கள் கொல்பக் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago