2025 மே 10, சனிக்கிழமை

றபாடாவுக்கு தற்காலிகத் தடை

Shanmugan Murugavel   / 2025 மே 04 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொழுதுபோக்கு போதைப்பொருள் பாவித்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாலர் ககிஸோ றபாடா, தற்காலிக தடையொன்றை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையிலேயே இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) கடந்த மாதம் மூன்றாம் திகதி றபாடா விலகியிருந்தார். அந்நேரத்தில் தனிப்பட்ட விடயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்குச் சென்றதாக றபாடாவின் ஐ.பி.எல் அணியான குஜராத் டைட்டான்ஸ் தெரிவித்திருந்தது.

தென்னாபிரிக்க உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் பெப்ரவரி வரையில் பங்கேற்கும்போதே இப்பாவனை இடம்பெற்றதாக அறியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X