2025 ஜூலை 07, திங்கட்கிழமை

றியல் மட்ரிட்டில் இணைகிறார் ஹஸார்ட்?

Editorial   / 2019 மே 16 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஈடின் ஹஸார்ட், யூரோப்பா லீக் தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் 29ஆம் திகதி முடிவடைந்த பின்னர் 100 மில்லியன் யூரோக்களுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் தனது இறுதிப் போட்டி எனக் கருதப்படுகின்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றிக்கெதிரான போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஈடின் ஹஸார், தனது எதிர்காலம் குறித்து தான் தீர்மானித்து விட்டதாகவும், தனது விருப்பங்களின்படி செல்சி செயற்படக் காத்திருப்பதாகக் கூறியிருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் பருவகாலத்தில் செல்சியுடன் இணைந்து கொள்ளவுள்ள ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச்சின் நேர்காணலில், என்கலோ கன்டே, டேவிட் லூயிஸ், அன்டோனியா ருடிகருடன் இணைந்து விளையாடுவதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், நடப்பு பருவகாலத்துடன் செல்சியை விட்டு ஈடின் ஹஸார்ட் விலகுவார் என்பதை குறித்த நேர்காணல் உறுதி செய்வது போலுள்ளது.

இந்நிலையில், ஈடின் ஹஸார்ட்டை, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலேயே தொடர விரும்பும் அவ்வணியின் மத்தியகளவீரரான பிலிப் கோச்சினியோ மூலம் பிரதியீடு செய்ய செல்சி எதிர்பார்க்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .