Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில், 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்கா தக்க வைத்துள்ளது.
அரையிறுதிப் போட்டியில் அஞ்சல் கோலை அமெரிக்கா கீழே போட்டிருந்த நிலையில், மேன்முறையீடு செய்து, தனித்து ஓடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற தியன்னா பர்ட்டோலெட்டா, அலிஸன் ஃபீலிக்ஸ், இங்கிலிஷ் காட்னர், டோரி பூயி ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க அணி, இரண்டாவது உலக சாதனை நேரமாக 41.01 செக்கன்களில் ஓடி தங்கம் வென்றிருந்தது.
போட்டித் தூரத்தை 41.36 செக்கன்களில் கடந்த ஜமைக்கா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், போட்டித் தூரத்தை 41.77 செக்கன்களில் கடந்த பெரிய பிரித்தானியா வெண்கலப் பதக்கம் வென்றது.
இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தடகளத்தில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற முதலாவது தடகள வீராங்கனையாக தனது பெயரை அலிஸன் ஃபீலிக்ஸ் பதிவு செய்து கொண்டார்.
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago