Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கில் மரதன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற எதியோப்பிய வீரரான ஃபெயிஸா லிலேசா, எதுவிதப் பயமுமின்றி நாடு திரும்பலாம் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில், தனது போட்டித் தூரத்தை நிறைவுசெய்யும் போது, கைகளை உயர்த்தி, விலங்கிடப்படுவது போன்று, குறியீடொன்றை ஃபெயிஸா வெளிப்படுத்தியிருந்தார். அந்நாட்டில் அரசாங்கத்துக்கெதிரான விமர்சனங்களை மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்ததோடு, அதற்கெதிராகக் காண்பிக்கப்படும் குறியீட்டையே அவர் வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு, தான் நாடு திரும்பும் போது, தான் கொல்லப்படலாம் அல்லது சிறை வைக்கப்படலாம் என அச்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் கெட்டச்சூ றெடா, "அவரது அரசியல் நிலைப்பாடு காரணமாக, லெலிஸாவுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. ஒலிம்பிக் போட்டிகளில் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது சாத்தியமற்றது என்ற போதிலும், எதியோப்பிய ஒலிம்பிக் குழாமைச் சேர்ந்த ஏனையோருடன் நாடு திரும்பும் போது, அவர் வரவேற்கப்படுவார்" எனத் தெரிவித்தார்.
இதேவேளை, அவர் நாடு திரும்பினால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதனால் அவர் அகதிக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார் எனவும் தெரிவித்து, இணையத்தளத்தில் நிதிசேகரிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை, 2 நாட்களில் அவருக்காக 100,000 அமெரிக்க டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago