Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான மரதோனட்டப் போட்டியில் கென்யாவின் எலியட் ஜிப்ஜோஞ் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியின் இறுதி நிலைகளில் ஆதிக்கம் செலுத்திய 31 வயதான அவர், போட்டித் தூரத்தை, இரண்டு மணித்தியாலங்கள் எட்டு நிமிடங்கள் 44 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஜிப்ஜோஞ்சை விட 70 செக்கன்கள் பிந்தி, இரண்டு மணித்தியாலங்கள் ஒன்பது நிமிடங்கள் 54 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த எதியோப்பியாவின் ஃபெய்ஸ லியல்ஸா வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை இரண்டு மணித்தியாலங்கள் 10 நிமிடங்கள் ஐந்து செக்கன்களில் கடந்து வெண்கலப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்காவின் கலேன் ருப் பெற்றார்.
பங்கேற்ற 155 பேரில் 140 பேர் போட்டியை நிறைவு செய்திருந்த நிலையில், 25ஆம், 26ஆம் இடங்களை இந்தியர்களான தொன்னக்கல் கோபி, கேதா ராம் ஆகியோர் பெற்றதோடு, 34ஆம் இடத்தை நம்நாட்டவரான அனுராதா கூரே பெற்றார்.
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago