Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில், அத்லெட்டிக் பில்பாபோவை பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, போலின்ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது.
வலென்சியா, 2-1 கோல் கணக்கில் வெற்றிபெற்று, தரவரிசையில் இரண்டாமிடத்தில் நீடிக்கிறது.
அத்லெட்டி மட்ரிட், வில்லாறியல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .