Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தின் மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் ஈடின் ஹசார்ட்டின் கோலால் லிவர்பூலை வென்ற செல்சி நான்காவது சுற்றுக்குச் சென்றுள்ளது.
தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற குறித்த போட்டியின் 58ஆவது டேனியல் ஸ்டரிட்ஜ் பெற்ற கோலால் லிவர்பூல் முன்னிலை பெற்றது. எனினும், 79ஆவது நிமிடத்தில் எமெர்சன் பல்மீரி பெற்ற கோலோடு கோலெண்ணிக்கையை சமப்படுத்திய செல்சி, மாற்று வீரராகக் களமிறங்கிய ஹசார்ட் 85ஆவது நிமிடத்தில் பெற்ற கோலோடே இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பிரென்போர்ட் அணியுடனான குறித்த தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனலும் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. ஆர்சனல் சார்பாக, டனி வெல்பக் இரண்டு கோல்களையும் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே ஒரு கோலையும் பெற்றதோடு, பிரன்போர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலன் ஜட்ஜ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்றுஅதிகாலை இடம்பெற்றவ வட்போர்ட்டுடனான குறித்த சுற்றின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸும் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் இருந்தமை காரணமாகவே பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. டொட்டென்ஹாம் சார்பாக, டெலே அல்லி, எரிக் லமெலா ஆகியோரும் வட்போர்ட் சார்பாக இஸாக் சக்ஸஸ், எட்டியன்னே கப்பூவும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago