2025 ஜூன் 30, திங்கட்கிழமை

லிவர்பூல் – வெஸ்ட் ப்ரோம் போட்டி சமநிலை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிகளுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாடியோ மனே பெற்றதோடு, வெஸ்ட் ப்ரோம் சார்பாகப் பெறப்பட்ட கோலை செமி அஜயி பெற்றிருந்தார்.

இதேவேளை, வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் டொடென்ஹாம் ஹொட்ஸ்பர் சமநிலையில் முடித்திருந்தது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை தங்குய் என்டொம்பிலி பெற்றதோடு, வொல்வ்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமைன் சைஸ் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X