Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 03 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நேற்றைய இரண்டாம் நாளில், தனது முதலாவது சுற்றுப் போட்டியிலேயே தோற்று உலகின் நான்காம்நிலை வீரரான டொமினிக் தியெம் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் சாம் குவாரேயை எதிர்கொண்ட ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 7-6 (7-4), 6-7 (1-7), 3-6, 0-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஜப்பானின் யுஷி சுகிட்டாவை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்காவின் லொய்ட் ஹரிஸை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரேஸிலின் தியாகோ மொன்டெய்ரோவை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-4, 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஃபிரான்செஸ் தியஃபோயை எதிர்கொண்ட உலகின் 10ஆம்நிலை வீரரான ஃபபியோ ஃபொக்னி, 5-7, 6-4, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சீனாவின் ஸெஹெங் ஸைஸையை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சக ஜேர்மனிய வீராங்கனையனான தட்ஜனா மரியாவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும், உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையுமான அங்கெலிக் கேர்பர், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் லக்ஸம்பேர்க்கின் மன்டி மினெல்லாவை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் துனீஷியாவின் ஒன்ஸ் ஜபெயுரை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப்போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் திமியா பஷியென்கியை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸ், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில், இத்தாலியின் ஜியுலியா கட்டோ-மொன்டிகோனை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயுடன் இணைந்து செரீனா வில்லியம்ஸ் களமிறங்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago