2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வொல்வ்ஸால் வெளியேற்றப்பட்டது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சங்க சவால் (எஃப்.ஏ) கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் (வொல்வ்ஸ்) அணியின் மைதானத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குறித்த தொடரின் காலிறுதிப் போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியின் இடைவேளைக்கு முன்பாக, வொல்வ்ஸின் மத்தியகள வீரர் டியகோ ஜோடாவினதும், இடைவேளையைத் தொடர்ந்து, வொல்வ்ஸின் முன்கள வீரரான றாவுல்ஸ் ஜிமென்ஸினது கோல் கம்பத்தை நோக்கிய உதையையும், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் வழமையான கோல் காப்பாளர் டேவிட் டி கியாவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றிருந்த சேர்ஜியோ றொமாரோ தடுத்திருந்தார்.

எவ்வாறெனினும், போட்டியின் 70ஆவது நிமிடத்தில், றாவுல் ஜிமென்ஸின் அபாரமான கோலின் மூலம் முன்னிலை பெற்ற வொல்வ்ஸ், அடுத்த ஆறாவது நிமிடத்தில் டியகோ ஜோட்டா பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இந்நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரரான மார்க்கஸ் றஷ்போர்ட் கோலொன்றைப் பெற்றபோதும் அவ்வணி 1-2 என்ற கோல் கணக்கில் இறுதியில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.

இதேவேளை, சுவான்சீயின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான குறித்த தொடரின் மற்றொரு காலிறுதிப் போட்டியில், இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

மன்செஸ்டர் சிற்றி சார்பாக, பெர்ணார்டோ சில்வா, சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும், ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் பெறப்பட்டிருந்தது. சுவான்சீ சார்பாக, மற் கிறிமெஸ், பேர்சன்ட் செலினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .