A.P.Mathan / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்துக் குழாமில், சகலதுறை வீரரான சமித் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார்.
குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஸபார் அன்ஸாரி காயமடைந்து விளையாடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, சமித் பட்டேலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான சமித் பட்டேல், ஏற்கெனவே காணப்படும் மொய்ன் அலி, அடில் ரஷீத் ஆகிய இரு சுழல்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், விளையாடும் பதினொருபேரில் இடம்பிடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைப்பது சந்தேகமே.
அண்மைய உள்ளூர் கிரிக்கெட் பருவகாலத்தின்போது துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளங்களில் குறிப்பிடத்தக்க பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்ததும் இந்திய உபகண்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமுமே சமித் பட்டேலுக்கு அணியில் இடம்கிடைக்க முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருக்கும் இவர், 15.57 என்ற சராசரியில் 109 ஓட்டங்களைப் பெற்றிருப்பதோடு, 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .